BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
விளையாட்டு

ஸ்குவாஷ்: கூட்டரசு பிரதேசம் தங்கம்

20/09/2022 07:59 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர், (பெர்னாமா) -- 2022 சுக்மா விளையாட்டுப் போட்டியின், ஸ்குவாஷ் பெண்கள் பிரிவில், கூட்டரசு பிரதேசத்தின் சான் இவேன் வெற்றியாளராக உருவெடுத்துள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் அவர் கெடாவின் எட்டு ஆண்டுகால ஆதிக்கத்தை இன்று காலையில் முடிவுக்கு கொண்டு வந்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில்,  சான் இவேன் அய்ரா அஸ்மானை 11-3 என்று முதல் செட்டில் வென்றார். 

பின்னர், 11-8 மற்றும் 11-3 என்று தோல்வி கண்ட இவே, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க கடுமையாக போராடினார். 

அதன் பலனாக, 11-5, 11-4 என்று இறுதியில் அவர் வெற்றிக் கண்டு தங்கப்பதக்கம் வென்றார். 

2018-ஆம் ஆண்டில், அய்ரா அஸ்மானிடம் தோல்வி கண்டிருந்த இவேன் இம்முறை வெற்றிக் கண்டு மாநிலத்திற்கு தங்கத்துடன் பெருமையைத் தேதித் தந்துள்ளார். 

 

-- பெர்னாமா