உலகம்

ஐ.நா சபை உறுப்பினர் கொள்கைகளை ரஷ்யா மீறுகிறது - ஜோ பைடன்

22/09/2022 07:36 PM

நியூயார்க், 22 செப்டம்பர் (பெர்னாமா) -- உக்ரேன் மீது போர் தொடுத்து அந்நாட்டை ஆக்கிரமிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இருப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா மீறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டினார்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் மாஸ்கோவின் செயலையும் பைடன் சாடினார்.

உக்ரேன் மீது திடீரென போரைத் தொடங்கியதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடிந்து கொண்ட பைடன், ஐ.நா உறுப்பியம் கொண்ட சுமார் 40 நாடுகள் உக்ரேனுக்கு நிதி உட்பட போருக்கான ஆயுதங்களை வழங்கி உதவி வருவதையும் சுட்டிக்காட்டினார்.

"நாங்கள் உக்ரேனுடன் துணை நிற்கின்றோம். உங்களைப் போலவே, அமெரிக்காவும் இந்தப் போரை நியாயமான நிபந்தனைகளில் முடிக்க விரும்புகிறது. நாம் அனைவரும் கையெழுத்திட்ட நிபந்தனைகளின் படி. ஆனால் நீங்கள் ஒரு நாட்டின் நிலப்பரப்பைப் பலவந்தமாகக் கைப்பற்ற முடியாது. அதற்குத் தடையாக நிற்கும் ஒரே நாடு ரஷ்யா," என்று அவர் கூறினார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையின் 77வது ஆண்டுக் கூட்டத்தில் அவர் அவ்வாறு தெரிவித்தார். 

ஐ.நா-வின் பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா அதன் அண்டை நாடு மீது படையெடுத்து அந்நாட்டை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க முயன்று வருவதாக பைடன் கூறினார்.

--  பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)