உலகம்

இந்தியாவில் அதிகரிக்கும் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள்

23/09/2022 07:23 PM

உத்தரகண்ட், 23 செப்டம்பர் (பெர்னாமா) -- கிழக்கு மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பதிவு செய்யப்படும் டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடுமையான பருவமழை காலத்திற்குப் பிறகு, கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்ததே அதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் 657 சம்பவங்களும், ஒடிசா மாநிலத்தில் 3,788 டெங்கி காய்ச்சல் சம்பவங்களும் இதுவரை பதிவாகியுள்ளன.

கொல்கத்தாவில், டெங்கி காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

கிழக்கு கொல்கத்தா நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கொசுக்களை அழிக்கும் பொருட்டு, குடியிருப்புப் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பணியில் நகராட்சி ஊழியர்களை ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் டெங்கி காய்ச்சலினால் உலகளவில் 40,000 பேர் உயிரிழக்கின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)