உலகம்

சொமாலியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்

04/10/2022 12:21 PM

ஹிரன், 04 அக்டோபர், (பெர்னாமா) -  சொமாலியா, ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. 

இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்த கொடூர தாக்குதலுக்க அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-- பெர்னாமா