BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
விளையாட்டு

நோத்திங்ஹமை தோற்கடித்தது லெய்செஸ்டர்

04/10/2022 07:30 PM

லண்டன், 04 அக்டோபர் (பெர்னாமா) -- இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ண 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் நோத்திங்ஹம் ஃபோரெஸ்டை அதிரடியாய் வீழ்த்தியது.

அதில், இரு கோல்களை அடித்த ஜேம்ஸ் மேடிசன் ஆட்ட நாயகனானார்.

லெய்செஸ்டர் சிட்டியின் சொந்த அரங்கமான கிங் பவரில் நடைபெற்ற இவ்வாட்டம் முதல் பாதியிலே வெற்றியை அதற்கு சொந்தமாக்கியது.

25-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ஜேம்ஸ் மேடிசன் அடுத்த 10 நிமிடங்களில் மேலும் ஒரு கோலைப் போட்டார்.

பின்னர் ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் ஹார்வி பான்ஸ் மேலும் ஒரு கோலைப் போட்டதில் முதல் பாதி ஆட்டம் 3-0 என்று முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் லெய்செஸ்டர் நான்காவது கோலை அடித்தது.

தகுதி இறக்கும் காணும் நிலையில், இருக்கும் லெய்செஸ்டரின் இந்த வெற்றியானது, தோல்வியின் விளிம்பில் இருந்து அதனை தற்காக்கச் செய்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)