விளையாட்டு

கெடாவை 3-1 என வீழ்த்தியது ஜே.டி.தி

05/10/2022 04:04 PM

அலோர் ஸ்டார், 05 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை சொந்தமாக்கி இருக்கும் ஜே.டி.தி. நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மேலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

3-1 என்ற கோல்களில் கெடாவை அதன் சொந்த அரங்கில் ஜே.டி.தி தோற்கடித்துள்ளது.

முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 11ஆவது நிமிடத்தில் கெடா தமது ஒரே கோலை வங்ஞா ரோனால்ட் ஙா மூலம் அடித்தது.

1-0 என தொடர்ந்து முன்னணி வகித்து வந்த கெடாவின் தற்காப்பு பகுதி பலவீனமானதில், ஜே.டி.தி. 36ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து முதல் பாதியை 1-1 என்று சமன் செய்தது.

முன் பாதியில், ஜே.டி.தி. ஆட்டக்காரர் பெர்க்சென் செய்த தவறுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதில் அவ்வணி இரண்டாம் பாதியில் 10 பேருடன் விளையாட நேர்ந்தது.

இருந்தபோதிலும், 60ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை லாவகமாக்கி கோல் அடித்த ஜே.டி.தி. 79ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலுடன் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது.

இன்னும் சில ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் ஜே.டி.தி. தொடர்ந்து ஒன்பதாவது முறை சூப்பர் லீக் வெற்றியாளராக முடிசூடுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)