பொது

3ஆம் காலாண்டில் ஒரு லட்சம் விற்பனை இலக்கைக் கடந்துள்ளது புரோட்டோன் நிறுவனம்

05/10/2022 04:22 PM

கோலாலம்பூர், 05 அக்டோபர் (பெர்னாமா) -- தேசிய கார் வெளியீட்டு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் 2022ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் விற்பனை இலக்கான ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

இவ்வாண்டு முதல் ஒன்பது மாதங்களில் ஒரு லட்சத்து 2,353 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 40.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
 
மேலும், செப்டம்பரில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியில் 14,872 கார்கள் விற்கப்பட்ட நிலையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 42, 229 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே புரோட்டோன் இவ்வாண்டின் விற்பனை இலக்கை அடைந்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக புரோட்டோன்  தனது விற்பனை இலக்கை அடைந்து வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)