BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
உலகம்

இந்தோனேசிய படகு ஒன்று கடலில் தீப்பிடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்

25/10/2022 05:48 PM

நூசா தெங்காரா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- நேற்று திங்கட்கிழமை, கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்திற்கு அருகில், இந்தோனேசிய படகு ஒன்று கடலில் தீப்பிடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

குழந்தை, சிறுவர் உட்பட கப்பலில் இருந்தவர்களை மீட்புப் பணியாளர்கள், கொந்தளிக்கும் கடலில் இருந்து காப்பாற்றும் காட்சி கொண்ட காணொளியைத் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடரப்பட்டுள்ளதை அடுத்து, குறைந்தது 312 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூபாங்கிலுள்ள தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்தது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)