GE15 NEWS   Tuan Ibrahim is opposition leader in Pahang State Assembly | 

தேர்தலில் வெற்றி பெற்று, அரசாங்கத்தை அமைப்பதே, தேசிய முன்னணியின் முன்னுரிமை -பிரதமர்

15/11/2022 05:28 PM

பெரா, 15 நவம்பர் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசாங்கத்தை அமைப்பதே, தேசிய முன்னணியின் முன்னுரிமை என்று, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கின்றார்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்படும் கூட்டணி குறித்து சிந்திப்பது இது நேரமல்ல என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கூட்டணி அமைப்பது கட்சியின் முடிவைப் பொறுத்தது என்றும் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கப்படாது என்று அவர் கூறியிருக்கின்றார்.

"ஆதலால், கூட்டணி அமைத்து இணைவதா இல்லையா என்பது குறித்து பின்னர் யோசிக்கப்படும். ஆனால், உறுதி என்னவென்றால், நேற்று நான் கூறியதுபோல், சபா மற்றும் சரவாக் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கப்படும் என்பதாகும். சபா மற்றும் சரவாக்கை விட்டு எங்களால் பிரிய முடியாது" என்று, பிரதமர் கூறியிருக்கின்றார்.

பேராக், சுங்கை சிப்புட்டில் உள்ள லாசா பெல்டா குடியேற்றக்காரர்களுடன் இன்று  நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, இஸ்மாயில் சப்ரி இவ்வாறு கூறியிருக்கின்றார்.

இத்தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் தனித்து ஆட்சி அமைக்கத் தவறினால், தேசிய முன்னணியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை பாஸ்  நிராகரிக்கவில்லை என்று கூறப்பட்டிருப்பது குறித்து வினவப்பட்டபோது, பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]