GE15 NEWS   Tuan Ibrahim is opposition leader in Pahang State Assembly | 
பொது

போக்குவரத்து அமைச்சராக லோக் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்

25/11/2022 07:21 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- புதிய அமைச்சரவையில், லோக் சியூ ஃபூக் மீண்டும் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று, கேடிஎம்பி எனப்படும் கெரேத்தாப்பி தானா மெலாயு ஊழியர்கள் சங்கம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தி இருக்கிறது.

ஜசெக தலைமைச் செயலாளரான லோக்கினால், நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்த முடியும் என்று அச்சங்கத் தலைவர் அப்துல் ரசாக் ஹசான் அறிக்கை ஒன்றின் வழி இன்று தெரித்தார்.

இதற்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கும்போது அவர் சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றுகள் இருப்பதாக அவர் கூறினார்.

அதனால், போக்குவரத்து அமைச்சராக லோக் மீண்டும் நியமிக்கப்பட்டால், பொதுப் போக்குவரத்து முறை மேம்படையும் என்பதுடன் மேலும் ஆக்ககரமாகவும் இருக்கும் என்று அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

கேடிஎம்பி மற்றும் இதர சேவை உட்பட ஒட்டுமொத்த போக்குவரத்து கட்டமைப்பு குறித்தும் பொதுமக்கள் தற்போது புகார் கூறிவருவதை அவர் சுட்டிக் காடினார்.

தனது பயனீட்டாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து கட்டமைப்பும், குறிப்பாக, கேடிஎம்பி எதிர்நோக்கி வரும் நடப்பு கட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் என்பதால் தமது சங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அன்வாரை அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)