GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

25/11/2022 07:46 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் பத்தாவது பிரதமராக பதவியேற்றிருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு உலக அளவில் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

அன்வார், பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லூங், விரைவில் தமது குடியரசுக்கு வருகைப் புரியுமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவ்விரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்த மலேசியாவின் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உச்சநிலை மாநாட்டில், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி உறவின் பலன் குறித்து உரையாற்றியபோது அவரை இறுதியாக சந்தித்ததை நினைவு கூர்ந்த சியேன் அவருடனான புகைப்படத்தையும் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதேவேளையில், இந்தோனேசிய மக்களால் மதிக்கத்தக்க மற்றும் நீண்டகாலமாக அறியப்பட்ட தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆவார் என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.

இந்த நெருங்கிய உறவு, மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு நிலவரத்தில், மலேசியாவுடன் வியூக கூட்டமைப்பை வலுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தானியப் பிரதமர் செபாஸ் ஷரிஃப்பும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

அவ்விரு நாடுகளுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் உறவை வலுப்படுத்த அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)