பொது

துணைப் பிரதமர் வேட்பாளரை சாஹிட் ஹமிடி தேர்வு செய்வார்

25/11/2022 07:52 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- துணைப் பிரதமர் பதவிக்கான தேசிய முன்னணி வேட்பாளரை அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியே முடிவு செய்வார்.

தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும் அதற்கு சாத்தியமான வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போதிலும் யார் அந்த வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படவில்லை என்று கூறிய அவர், இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அஹ்மாட் சாஹிட்டுக்கே இருப்பதால் அது அவரிடமே விடப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் தேசிய முன்னணி மற்றும் ஜிபிஎஸ் எனப்படும் சரவாக் கூட்டணி கட்சிகளுக்கு வழங்குவதற்காக இரண்டு துணைப் பிரதமர் பதவிகள் உருவாக்கப்படும் என்று, பிர்தமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ரஹிம் நேற்று கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)