GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

நவ.27 ஜோகூரில் சிறப்பு விடுமுறை

25/11/2022 07:55 PM

ஜோகூர் பாரு, 25 நவம்பர் (பெர்னாமா) -- 2022 மலேசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஜோகூரின் ஜே.டி.தி தகுதிப் பெற்றத்தை அடுத்து, ஜோகூர் மாநில அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 27-ஆம் தேதியை சிறப்பு விடுமுறையாக அறிவித்தது.

அதேவேளையில், நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நவம்பர் 28 தேதியை பொது விடுமுறை தினமாகப் பயன்படுத்த மாநில அரசும் ஒப்புக்கொண்டிருப்பதாக ஜோகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி கூறியிருக்கின்றார்.

ஜோகூர் மக்கள் மற்றும் ஜே.டி.தியின் தீவிர ரசிகர்கள் எப்போதும் அளித்து வரும் உறுதியான ஆதரவைப் பாராட்டும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹபிஸ் காஸி கூறினார்.

இதனிடையே, இந்த இறுதி ஆட்டத்தை ஆதரவாளர்கள் கண்டு களிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களின் பயணத்தைத் திட்டமிடுவதற்கும் விடுமுறை வசதியாக இருக்கும் என்று ஜோகூர் அரசு செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி தனது முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்.

சட்டம் 369 அல்லது 1952-ஆம் ஆண்டு பொது விடுமுறை சட்டம். செக்‌ஷன் 8 மற்றும் 9-தின் கீழ் இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)