பொது

வாழ்க்கைச் செலவீன பிரச்சனை; விவாதிக்க சிறப்புக் கூட்டம் - அன்வார்

27/11/2022 05:44 PM

புத்ராஜெயா, 27 நவம்பர் (பெர்னாமா) -- மக்களை நெருக்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவீன பிரச்சனை குறித்து விவாதிக்க, அரசாங்கத் துறைகள் உட்பட நிறுவனங்களுடன் இணைந்து இன்று காலையில்  நடத்தப்பட்ட 2022-ஆம் ஆண்டு தேசிய வாழ்வாதார நடவடிக்கை மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ முஹ்மட் சுக்கி அலி, பேங்க் நெகாரா மலேசியா ஆளுநர் டான் ஶ்ரீ நோர் ஷம்சியா முஹ்மட் உட்பட புள்ளிவிவரத் துறை; உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சு; நிதி அமைச்சு; விவசாய, உணவுத் தொழில் துறை அமைச்சு மற்றும் எரிவாயு, இயற்கை வள அமைச்சுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இச்சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

வாழ்க்கைச் செலவீனம் தொடர்பான கூட்டம் அவசர தேவையாக இருப்பதால் உடனடியாக கூட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று  அன்வர் நேற்று கூறியிருந்தார்.

வாழ்க்கைச் செலவீனம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க பல குறுகிய மற்றும் நீண்ட கால செயல் திட்டங்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் விவரித்திருந்தார். 

-- பெர்னாமா

[[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]