GE15 NEWS  
பொது

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மாமன்னரைச் சந்தித்தார்

29/11/2022 10:01 PM

கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை மாட்சிமை தங்கிய மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாயாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா-வைச் சந்தித்தார்.

கடந்த வியாழக்கிழமை நவம்பர் 24-ஆம் தேதி, நாட்டின் 10-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக அன்வார் மாமன்னரைச் சந்தித்தாக இஸ்தானா நெகாரா தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 40(2)(a) மற்றும் பிரிவு 43 (2)(a)-வுக்கு ஏற்ப, அன்வார் பிரதமராக நியமனம் செய்யப்பட்டு பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)