GE15 NEWS |
மாஸ்கோ, 09 டிசம்பர் (பெர்னாமா) -- உக்ரேனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு தளங்களைத் தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியது.
உக்ரேனின் தாக்குதலைத் தடுப்பதற்காவே அவ்வாறு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகிறார்.
ரஷ்யா வசம் இருக்கும் "Donetsk" எனும் பகுதிக்கு நீர் விநியோகத்தைத் தடை செய்திருக்கும் உக்ரேனின் நடவடிக்கையையும் விளாடிமிர் புதின் சாடினார்.
உக்ரேனின் இத்தகைய செயல்கள் "இனப்படுகொலை"-க்குச் சமமாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும்,குர்ஸ்க் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உக்ரேன் தாக்குதல் நடத்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
உக்ரேன் மீதான படையெடுப்புக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும், ரஷ்யாவின் தாக்குதல் தொடரப்படும் என்றும் புதின் குறிப்பிட்டார்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை