GE15 NEWS |
லீமா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- பெருவின் முன்னாள் அதிபர் பெட்ரோ கஸ்டிலோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்களைக் களைக்க கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி கிளர்ச்சியை ஏற்படுத்திய குற்றத்திற்காக 53 வயதான பெட்ரோ கஸ்டிலோ புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேல் விசாரணைக்காக அவர் போலீஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கிளர்ச்சி மற்றும் சதிச் செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதால், அடுத்த ஏழு நாள்களுக்கு அவரைத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021-ஆம் ஆண்டு எளிய பெரும்பான்மையில் வெற்றியைப் பெற்ற முன்னாள் ஆசிரியரான காஸ்டிலோ, ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியுள்ளார்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை