பொது

கொவிட்-19 நிர்வகிப்பிற்காகச் செலவிடப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து புகார் -எஸ்.பி.ஆர்.எம்

09/12/2022 06:04 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 நிர்வகிப்பிற்காக 2020, 2021-ஆம் ஆண்டுகளில் முந்தைய அரசாங்கம், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து புகார் பெறப்பட்டதை மலேசிய உழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம் உறுதிப்படுத்தியது.

விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சம்பந்தப்பட்ட மொத்த ஒதுக்கீடு 53 ஆயிரம் கோடி ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக, எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

அதில், 9,250 கோடி ரிங்கிட் அரசாங்க நிதி என்றும் 43 ஆயிரத்து 750 கோடி ரிங்கிட் அரசாங்க நிதி அல்ல என்றும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எஸ்பிஆர்எம் குறிப்பிட்டிருக்கிறது.

இந்நிலையில், 9,250 கோடி ரிங்கிட் நிதி குறித்து விசாரணை நடத்துவதில், எஸ்பிஆர்எம் கவனம் செலுத்துவதாகவும் அது கூறியுள்ளது.

அந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான விரிவான விபரங்களை நிதி அமைச்சு அடுத்த வாரம் எஸ்பிஆர்எம்-மிடம் ஒப்படைக்க விருக்கிறது.

-பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)