விளையாட்டு

ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை கைப்பற்றியது பார்சிலோனா

16/01/2023 02:24 PM

சவூதி அரேபியா, 16 ஜனவரி (பெர்னாமா) --  ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை பார்சிலோனா கைப்பற்றியது.

சவூதி அரேபியாவில் நேற்று பின்னிரவு வேளையில் நடைபெற்ற ஆட்டத்தில் அது 3-1 என்ற கோல்களில், ரியல் மெட்ரிட்டைத் தோற்கடித்து.

பார்சிலோனாசின் புதிய நிர்வாகியாக சேவி ஹெர்னாண்டஸ் பொறுப்பேற்ற பிறகு அக்கிளப் கைப்பற்றிய முதல் வெற்றி இதுவாகும்.

சவூதியின் ராஜா ஃபஹ்ட் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தின் முதல் பாதியில் கோல் போடுவதில் இரு தரப்புமே கடும் சவாலை எதிர்நோக்கின.

தற்காப்பு அரண்கள் மிகவும் பலமாக இருந்ததால், ஆட்டமும் விறுவிறுப்பாக அமைந்தது.

33-வது நிமிடத்தில் பார்சா போர்த்துகலின் காவி மூலம் முதல் கோலை அடிக்க, பின்னர் 45-வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி வழி இரண்டாவது கோல் போட்டு 2-0 என்ற நிலையில் முதல் பாதியை முடித்தனர்.

இரண்டாம் பாதியில், ரியல் மெட்ரிட்டின் கோல் போடும் முயற்சிகளை முறியடித்துக் கொண்டிருந்த பார்சிலோனா 69-வது நிமிடம் மூன்றாவது கோலைப் போட்டது.

ஆட்டம் முடியும் இறுதி நிமிடத்தில், ரியல் மெட்ரிட் மேற்கொண்ட முயற்சி ஒன்று கோலாக ஆட்டம் 3-1 என்ற நிலையில் முடிந்தது.

லா லீகா கிண்ணப் போட்டிகளில் பார்சிலோனா மோசமான அடைவு நிலையைப் பதிவு செய்து வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் சேவி ஹெர்னாண்டஸ் பார்சாவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)