விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி; நான்காவது சுற்றுக்கு நுழைந்தார் ஆண்ட்ரூ ரூபெலெவ்

21/01/2023 07:35 PM

மெல்பர்ன், 21 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில், ரஷ்யாவின் ஆண்ட்ரூ ரூபெலெவ் நான்காவது சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார்.

இன்று காலை நடைபெற்ற, மூன்றாம் சுற்று ஆட்டத்தில் அவர் இங்கிலாந்தின் டேனியல் எவான்ஸ்சைத் தோற்கடித்திருக்கின்றார்.

கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

அதில், கடுமையான போட்டி நிலவி வருகின்ற வேளையில், ஆண்ட்ரூ ரூபெலெவ் அடுத்த சுற்றில் கால் வைத்துள்ளார்.

அவர், 6-4, 6-2, மற்றும் 6-3, என்று உலகத் தர வரிசையில் 25-வது இடத்தில் உள்ள எவான்ஸ்சைத் வீழ்த்தியிருக்கின்றார்.

இதனிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னாள் முதன்நிலை விளையாட்டளரான செக் குடியரசின் கரோலினா ப்லிஸ்கோவா அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறினார்.

அவர் ரஷ்யாவின் வர்வரா கிராசெவா எதிர் கொண்டு 6-4 6-2 என்று நேரடிச் செட்களில் வெற்றிப் பெற்றார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)