விளையாட்டு

ஸ்பெயினை வீழ்த்தும் இலக்கில் மலேசியா

21/01/2023 07:43 PM

புவனேஸ்வர், 21 ஜனவரி (பெர்னாமா) -- 2023 உலக ஹாக்கி கிண்ணம்..

நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா, புவனேஸ்வரில் நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா, ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், ஸ்பெயினின் தடைகளை தேசிய அணியால் சமாளிக்க முடியும் என்று அவ்வணியின் மத்திய திடல் ஆட்டக்காரர் முஹமட் அஷ்ரான் ஹம்சானி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த உலகக் கிண்ண ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர், நடைபெற்ற ஒரு நட்புமுறை ஆட்டத்தில் மலேசியா 2-3 என்ற நிலையில், ஸ்பெயினிடம் தோல்வி கண்டிருந்ததது.

ஆனாலும், உலகத் தர வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் அதனை வெற்றிகொள்ளக் கூடிய திறன் தேசிய அணியிடம் இருப்பதாக முஹமட் அஷ்ரான் ஹம்சானி நம்புகின்றார்.

"ஸ்பெயின் அணியோடு முன்னதாக ஓர் ஆட்டத்தில் விளையாடி இருக்கின்றோம். எனவே அவர்களின் எனவே அவர்களின் ஆட்டத்தின் பாணியைப் பற்றி எங்களுக்கு கொஞ்சம் தெரியும். எனவே இப்போது நமக்குத் தேவை என்னவென்றால், நாம் ஸ்பெயினுடன் களமிறங்குவதால், எந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே அதைப் பயன்படுத்துவது சிறந்தது," என்று முஹமட் அஷ்ரான் ஹம்சானி கூறினார்.

அண்மையில், ஸ்பெயினிடம் கண்ட தோல்வியில் இருந்து ஸ்பீடி தைகெர்ஸ் அணி வீரர்கள் மீண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அவ்வணிக்கு எதிரான வெற்றியை உருவாக்குவதில் தேசிய அணி இறுதி வரை போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுவரை, ஸ்பெயினை 18 முறை சந்தித்துள்ள மலேசியா, மூன்று ஆட்டங்களில் வெற்றியும், இரு சமநிலை முடிவையும் பெற்றிருக்கிறது.

எஞ்சிய ஆட்டங்களில் ஸ்பெயின் அணியே வென்றிருக்கிறது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)