விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி: காலிறுதிக்கு ஜோகோவிச் தேர்வு

24/01/2023 07:54 PM

மெல்போர்ன், 24 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்குக் கணிக்கப்பட்டது போல் உலகின் நான்காம் நிலை விளையாட்டாளரான நோவக் ஜோகோவிச் முன்னேறினார். 

உபசரணை நாட்டின் அலெக்ஸ் டி மினொருடன் நோவக் ஜோகோவிச் விளையாடினார்.

எந்தவொரு சிரமத்தையும் எதிர்நோக்காமல் ஜோகோவிச் 6-2 6-1 6-2 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்றார்.

தனது 10-வது ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி கிண்ணத்தை வெல்லும் இலக்கில், ஜோகோவிச் உலகின் ஆறாம் நிலை விளையாட்டாளரான ஆண்ட்ரே ருப்லெவுடன் மோதவுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில், 6-3, 3-6, 6-3, 4-6 மற்றும் 11-9 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று ஆண்ட்ரே ருப்லெவ் காலிறுதி சுற்றுக்குத் தேர்வாகினார்.

இவர்களின் ஆட்டம் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதனிடையே பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில், விம்பிள்டன் வெற்றியாளர் எலெனா ரைபகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் ஐந்தாம் நிலை விளையாட்டாளரான யெலினா ஓஸ்டாபென்கோவுடன் விளையாடிய ரைபகினா  6-2 6-4 என்ற புள்ளிகளில் எளிதாக வெற்றி பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)