சிறப்புச் செய்தி

இந்த மரத்துக்கு வயது 2,624

25/01/2023 04:07 PM

வாஷிங்டன், 25 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்காவின் வட கெரோலினா மாகாணத்தில் பாய்ந்து ஓடுகிறது கருப்பு நதி.

அதன் கரையில் ஏராளமான  சைப்ரஸ் மரங்கள் வானத்தை நோக்கி வீற்றிருக்கின்றன.

இவை இலைகளற்ற சைப்ரஸ் வகையைச் சார்ந்தவை. கடந்த ஆயிரமாண்டுகளாக நடந்த போர், புயல், காற்று, வெள்ளம் என்று எதற்கும் அசையாமல் அப்படியே அவை நிற்கின்றன. 

இதுவரைக்கும் 99 சதவீத சைப்ரஸ் மரங்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அழியாத ஒரு சதவீதத்தில் மிக வயதானவை இந்த மரங்கள்தாம். ஆம், கருப்பு நதியின் கரையில் உள்ள மரங்களில் ஒன்றின் வயது 2,624 என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

அதாவது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிலிருந்து இந்த மரம் இருக்கிறது. 

அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக வயதான சைப்ரஸ் மரமும் இதுதான். 

இந்த மரத்தைப் பற்றிய தகவல் வெளியானதும் மக்கள் கருப்பு நதிக்கரையை நோக்கிப் படையெடுத்த கதையும் உண்டு

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)