விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

25/01/2023 05:36 PM

மெல்போர்ன், 25 ஜனவரி (பெர்னாமா) --  ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி, கிரேக்க நாட்டின் நட்சத்திரம் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் நான்காவது முறையாக அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருக்கின்றார்.

காலிறுதி ஆட்டத்தில், சிட்சிபாஸ் செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை தோற்கடித்து அடுத்த சுற்றில் கால் வைத்தார்.

காலிறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3 என முதல் செட்டை வென்றார்.

பின்னர், 7-6 என்று இரண்டாம் செட்டில், உலகத் தரவரிசையில் 71-வது இடத்தில் இருக்கும் ஜிரி லெஹெகாவிடம் தோல்வி கண்டார்.

விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் போராடிய சிட்சிபாஸ், இறுதியாக 6-4 என மூன்றாவது செட்டைக் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் அவர் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் கரோன் கஜானோவைச் சந்திக்கவிருக்கின்றார்.

இதனிடையே, பெண்கள் பிரிவில், உலகின் முன்னாள் முதல் நிலை ஆட்டக்காரரான செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவைத் காலிறுதியில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் போலாந்தின் மேக்னா லினெட்.

உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கும் அவர், 6-3 மற்றும் 7-5 நேரடி செட்களில் வெற்றிப் பெற்றிருக்கின்றார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி,
வரும் 29-ம் தேதிவரை நடைபெறுகின்றது.

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)