முனிக், 25 ஜனவரி (பெர்னாமா) -- ஜெர்மனி பண்டெஸ்லிகா கிண்ண புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தை பேயர்ன் முனிச் தற்காத்துக்கொண்டிருக்கிறது.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பேயர்ன் முனிச் 1-1 என்று கொலோன் உடன் சமநிலை கண்டதன் வழி, இரண்டாம் இடத்தில் இருக்கும் லீப்ஜிக்கை நான்கு புள்ளி வித்தியாத்தில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
10 முறை வெற்றியாளர் பட்டத்தை வென்றிருக்கும் பேயர்ன் முனிச், இப்பருவத்தில் அந்த சாதனையை தொடர்ந்து தற்காத்துக்கொள்ள கடும் சவாலை எதிர்கொண்டு வருகிறது.
ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே எதிரணியான கொலோன்முதன் கோலை அடித்து, பாயனை அதன் சொந்த அரங்கில் அதிர்ச்சி அடையச் செய்தது.
அதே நிலை நீடித்தத்தால் முதல் பாதி ஆட்டம் 1-0 என்று கொலோனுக்கு சாதகமானது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் கொலோன், பாயனுக்கு கடும் சவாலைக் கொடுத்ததால் அது கோல் போட முடியாமல் திணறியது.
ஆட்டம் இறுதிவரை அவ்வாறே முடியும் என்று கணிக்கப்பட்டிருந்த வேளையில், 90-வது நிமிடத்தில் பாயன் முனிக்கின் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜோஷ்வா கிம்மிச் தூரத்திலிருந்து அடித்த பந்து கோலாகி சமநிலை முடிவைக் கொடுத்தது.
இந்த முடிவின் வழி, பாயன் தற்போது 36 புள்ளிகளப் பெற்றிருக்கிறது.
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
© 2024 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை