அரசியல்

கட்சித் தேர்தலுக்கான தேதியை அம்னோ உச்சமன்றம் நாளை முடிவு செய்யும்

26/01/2023 04:13 PM

கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- கட்சித் தேர்தலுக்கான தேதியை அம்னோ உச்சமன்றம் உச்சமன்றம் நாளை இரவு முடிவு செய்யும் என்று, அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.

கட்சி சட்டவிதிகள்படி, இறுதி முடிவு செய்யப்படுவதற்காக உச்ச மன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் கட்சியின் தொகுதி மட்டத்தில் அது குறித்து அவசியம் விவாதிக்கப்பட வேண்டும்.

"பொதுத் தேர்தல் நடந்து ஆறு மாதங்களுக்குள் கட்சித் தேர்தல் நடத்தப்பட்டுவிட வேண்டும் என்பதால், மே 15-ஆம் தேதிக்குள் அம்னோ தனது கட்சித் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்துவிட வேண்டியிருக்கிறது" என்று கோலாலம்பூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆறு மாதங்களுக்குத் தனது தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கும் தனது சட்டத்தில் அம்னோ திருத்தம் செய்திருப்பதால், இவ்வாண்டு மே 19-ஆம் தேதிக்குள் அது கட்சித் தேர்தலை நடத்திவிட வேண்டும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)