விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டி ; இறுதி சுற்றுக்கு சிட்சிட்பாஸ் தேர்வு

27/01/2023 07:39 PM

மெல்போர்ன், 27 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு உலகின் நான்காம் நிலை விளையாட்டாளரான ஸ்டீபனோஸ் சிட்சிட்பாஸ் முதன் முறையாக தேர்வாகியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு முதல் இப்போட்டியில் பங்கு கொண்டு வந்தாலும் சிட்சிட்பாஸ் இறுதி சுற்றுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இன்று பிற்பகல், உலகின் 18-ஆம் நிலை விளையாட்டாளரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் சிட்சிட்பாஸ் விளையாடினார்.

அதில் முதல் இரண்டு செட்களில் 7-6, 6-4 என்ற புள்ளிகளில்சிட்சிட்பாஸ் வெற்றி பெற்றாலும் மூன்றாவது செட்டில் 6-7 என்று அவர் தோல்வி கண்டார்.

இருப்பினும் திறமையாக விளையாடிய சிட்சிட்பாஸ் 6-3 என்று வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கான தனது நுழைவு சீட்டை உறுதி செய்தார்.

இவர்களின் ஆட்டம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் வரை நீடித்தது.

இறுதி ஆட்டத்தில் நோவாக் ஜோக்கோவிச் அல்லது தோம்மி பவுளுடன் சிட்சிட்பாஸ் விளையாடவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)