விளையாட்டு

ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டி: இறுதி ஆட்டத்தில் நோவாக் ஜோகோவிக்

28/01/2023 07:48 PM

மெல்போர்ன், 28 ஜனவரி (பெர்னாமா) -- ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நோவாக் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 10-வது முறையாக ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு அவர் தேர்வாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிக், அமெரிக்காவின் தோமி பால்லுடன் விளையாடினார்.

முதல் செட்டில் சிரமத்தை எதிர்நோக்கினாலும் 7-5 என்ற புள்ளிகளில் ஜோகோவிக் வெற்றி பெற்றார்.

இருப்பினும் அடுத்த இரண்டு சுற்றுகளில் 6-1 6-2 என்று எளிதாக வெற்றி பெற்று ஜோகோவிக் இறுதி ஆட்டத்திற்கான தனது இடத்தை உறுதி செய்து கொண்டார்.

இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், ஜோகோவிக் மீண்டும் உலகின் முதல் நிலை விளையாட்டாளராக வளம் வரலாம்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்தில் கிரேக்கத்தின் ஸ்டெஃபினோஸ் சிட்சிபாஸ்சுடன் ஜோகோவிக் விளையாடவுள்ளார்.

ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு சிட்சிபாஸ் தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)