பொது

பிப்ரவரி முதலாம் தேதி வரை 4 மாநிலங்களில் அடை மழை எச்சரிக்கை

30/01/2023 10:04 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- தீபகற்ப மலேசியாவின் ஜோகூர் மற்றும் பகாங் மற்றும் சபா, சரவாக்கின் பல பகுதிகளில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை அடை மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சரவாக்கின் கூச்சிங், சிபு, செலங்காவ், முக்கா, டாரோ, மத்து மற்றும் டாலாட் ஆகிய பகுதிகளிலும் சபாவின் சண்டக்கான், தெலுபிட், பெலுரான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளிலும் அடை மழை பெற்றும்.

பகாங்கின் குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பினிலும், ஜோகூரின் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கியிலும் கடும் மழை பெய்யும் என்றும் மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரெங்கானுவிலும் கிளந்தானின் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் பாசிர் பூத்தேவிலும் அடை மழை பெய்யும்.

இதனிடையே, தொடர்ந்து மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் பகுதிகளில் வெள்ளப் பேரிடர் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களைத் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனமான நட்மா கேட்டுக் கொண்டிருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]