பொது

தேனீக்களை உறங்க விடுங்கள்!

30/01/2023 10:11 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- மனிதர்களைப் போலவே பூச்சி இனங்களுக்கும் உறக்கம் தேவை.

அவ்வாறு உறக்கம் கெட்ட பூச்சிகள் மனநிலை பாதிக்கப்பட்டு சீக்கிரமே இறந்துவிடுமாம்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி தேனீக்கள் இனம் இவ்வாறாக அழிந்து வருகிறது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

பூ சாகுபடி செய்பவர்கள் தெளிக்கும் ரசாயன உரம்தான் இதற்குக் காரணமாம்.

பூக்களில் தேன் சேகரிக்க வரும் தேனீக்களை இந்த ரசாயனம் பாதித்து அதன் காரணமாக அவை தூக்கம் தொலைக்கின்றனவாம்.

தொடர்ந்து தூங்காத காரணத்தால் அவற்றால் உணவு தேடிச் சேகரிக்க முடியாமல் செத்தும் விடுகின்றனவாம்.

இந்தப் போக்கு தொடருமானால் சுற்றுச் சூழலில் அது மிகப் பெரும் சீர்கேட்டை உருவாக்கி தாவரங்களின் மகரந்த சேர்க்கையே கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]