பொது

'மெனு ரஹ்மா' திட்டம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும்

03/02/2023 07:31 PM

செராஸ், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- உயர்கல்விக் கழகங்களில் 'மெனு ரஹ்மா' திட்டத்தை உயர்கல்வி அமைச்சான, கே.பி.டி கூடிய விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

அத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என் உடன் கே.பி.டி இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட்நோர்டின் தெரிவித்தார்.

கோலாலம்பூர், யூ.சி.எஸ்.ஐ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.

ரஹ்மா உணவுத் திட்டத்தின் வழியாக நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 15,000 உணவகங்களில் மக்கள் தற்போது 5 ரிங்கிட் விலையில் மதிய மற்றும் இரவு உணவை சுவைக்க முடியும் என்று கே.பி.டி.என் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சலாஹுடின் அயூப் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]