விளையாட்டு

பண்டஸ்லீகா: பொருசியா டார்ட்மண்ட் வெற்றி

05/02/2023 07:52 PM

டார்ட்மண்ட், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கள் எண்ணிக்கையில் பொருசியா டார்ட்மண்ட், ஃப்ரைபர்க்கை தோற்கடித்தது.

ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சல் நிற வழங்கப்பட்டதால், ஃப்ரைபர்க்கை அணியின் ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனை சாதகமாக்கிய பொருசியா டார்ட்மண்ட் 24-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து கோல் வேட்டையைத் தொடங்கியது.

இருப்பினும் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 10 விளையாட்டாளர்களுடன் விளையாடிய ஃப்ரைபர்க் தனது ஒரே கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தனது இரண்டாவது கோலை அடித்து பொருசியா டார்ட்மண்ட் முன்னணி வகிக்கத் தொடங்கியது.
 
அதனைத் தொடர்ந்து, மேலும் மூன்று கோல்களை அடித்து பொருசியா டார்ட்மண்ட் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த வெற்றியின் வழி, 37 புள்ளிகளைப் பெற்று பொருசியா டார்ட்மண்ட் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)