உலகம்

துருக்கி - சிரியா நிலநடுத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

08/02/2023 12:50 PM

ஜெனீவா, 08  பிப்ரவரி (பெர்னாமா) -- துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை எட்டியிடுள்ளது. 

இதில் மொத்தம் 20,000 பேருக்கும் மேல் உயிரிழந்து இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். 

அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ள வேளையில்,  20,534 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாக அந்நாட்டின் துணை அதிபர் ஃபாத் ஆக்டே கூறி உள்ளார். 

அதேபோல் சிரியாவில் இதுவரை மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். 

11,342 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக துருக்கி பேரிடர் நிர்வாகக் குழு துறை தெரிவித்துள்ளது. 

இதில் 5,775 கட்டிடங்கள் இடிந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 

தெற்கு துருக்கியில் 650 மைல் தூரம் வரை நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுவரை 5,021 பேர் உயிரிழந்து உள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.


-- பெர்னாமா