உலகம்

ஸ்ரீபெரும்புதூரில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

26/09/2024 05:55 PM

ஸ்ரீபெரும்புதூர், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூரில், SAMSUNG ELECTRONICS நிறுவனத்தின் ஆயிரம் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாம் வாரத்தை எட்டியுள்ளது.

தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது மற்றும் கூடுதல் ஊதியம் வழங்குவது போன்ற கோரிக்கைகளுக்கு அந்நிறுவனம் தடையாக உள்ளதாக அதன் தொழிற்சங்க பேச்சாளர் கே.சி கோபி குமார் தெரிவித்துள்ளார்.

30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையிலான சராசரி மாத ஊதியத்தை 25 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்துவதற்கான கோரிக்கையுடன் இம்மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி சென்னையில் இப்போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேச்சு நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக சம்சோங் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையம், சித்து மூலம் பேச்சு வார்த்தை நடத்தாமல் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடவே நிறுவனம் எண்ணம் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதர வட்டார நிறுவனங்களில் பணிப்புரியும் இதுபோன்ற தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தை விட இந்தியாவில் 1.8 மடங்கு அதிகமாக வழங்குவதாக சம்சோங் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 70 விழுக்காடு உற்பத்திகள் தடைப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)