உலகம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க அனைத்துல ரீதியில் நடவடிக்கை

26/09/2024 06:05 PM

கொழும்பு, 26 செப்டம்பர் (பெர்னாமா) -- இலங்கை எதிர்நோக்கி இருக்கும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாட்டை மீட்பதற்கு அனைத்துல நிதியம் மற்றும் கடன் வழங்கும் வெளிநாட்டு தரப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ளதாக புதிய அதிபர், அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அதற்கான செயல்முறையை விரைவாக பூர்த்தி செய்து, நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் என்று அவர் உறுதியளித்தார்.

இதற்காக அனைத்துலக நிதியத்துடன் கலந்துரையாடல்களை தொடங்குவதோடு, வெளிநாட்டு நிதி வசதி தொடர்பான அம்சங்களையும் முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அதற்கான செயல்முறையை விரைவாக நிறைவு செய்து, நிதியைப் பெற முடியும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் நம்புகிறோம். என்றார் அவர். 

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில்  திசநாயகே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் நிலை நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது.

முன்னதாக, விக்ரமசிங்கே இணக்கம் தெரிவித்திருந்த அனைத்துலக நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக  திசநாயகே தனது பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். 

அதோடு, ஏழைகளுக்கு ஏற்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
    
இதனிடையே, புதிய அதிபராக பதவியேற்றிருக்கும் அவர் மற்றும் இலங்கையின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா குறித்தும், புதிய அரசாங்கத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பு குறித்தும் இலங்கை மக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

''நமது புதிய அதிபரிடம் நாட்டை மீண்டும் புதுப்பிக்கும் திறமை இருப்பதாக நான் உணர்கிறேன் என்று லங்கா ஜெயசிங்கே கூறினார்.

அப்பெண் பிரதமராக பதவியேற்ற பிறகு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். உண்மையில் எங்களுக்குப் பெருமையாக உள்ளது. இலங்கை வரலாற்றில் இவர் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார் என்றார் அவர். 

"புதிய பிரதமர் நமது நாட்டுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார் என்று என்னால் உறுதியாக கூற முடியும். கடந்த காலங்களில் மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர் எங்களுக்கு ஏதாவது நல்லது செய்வார் என்று மக்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது." என்று முன்னாள் ஆசிரியர் தேவிகா ராஜபக்சேகூறினார். 

தாம் அதிபராகப் பதிவியேற்றதும், அமரசூரியாவை இலங்கையின் பிரதமராக, திசநாயகே நியமித்ததோடு, அடுத்த சில மணி நேரங்களில் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது.
 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)