பொது

நச்சுணவு பாதிப்பு; 14 நாட்களுக்கு பள்ளி சிற்றுண்டிச் சாலையை மூட உத்தரவு

26/09/2024 07:35 PM

ஈப்போ, 26 செப்டம்பர் (பெர்னாமா) --  பேராக், ஈப்போவில் உள்ள செபோர் தேசிய பள்ளியில் சுமார் 101 மாணவர்கள் நச்சுணவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் சிற்றுண்டிச் சாலை அடுத்த மாதம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை பதினான்கு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

1983-ஆம் ஆண்டு உணவு சட்டம் செக்‌ஷன் 11-இன் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஃபைசூல் இட்வான் முஸ்தபா கூறினார்.

சிற்றுண்டிச் சாலையில் தயார் செய்த, சாக்லேட் சுவை கலந்த பானம் மற்றும் பொரித்த கோழியை உட்கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.

50 பெண் மாணவர்கள் உட்பட 51 ஆண் மாணவர்கள் என 101 மாணவர்களும் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலுக்கு ஆளாகியிருந்ததை, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனிடையே, ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் மேலதிக்க சிகிச்சைக்காக மாணவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருப்பதை, ஃபைசூல் இட்வான் உறுதிப்படுத்தினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)