ஜெர்மனி, 23 நவம்பர் (பெர்னாமா) -- பண்டெஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பர்க் அணியை வீழ்த்தி பாயர்ன் முனிக் வெற்றி பெற்றது.
பாயர்ன் முனிக்கின் ஆட்டக்காரர் ஹெரி கேன் இரு பெனால்டி கோல்களுடன் ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தி தமது அணிக்கு இவ்வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
11 சுற்றில்களில் ஹெரி கேன் 14 கோல்களை அடித்திருக்கும் நிலையில் பாயர்ன் முனிக் தற்போது எட்டு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
பண்டெஸ்லீகாவில் தமது 43 ஆட்டங்களில் 50 கோல்களை மிக விரைவாக அடித்த வீரராகவும் ஹெரி கேன் திகழ்கிறார்.
எனினும், பாயர்ன் முனிக் அணி, செயின்ட் பௌலி மற்றும் பென்ஃபிக்காவை 1-0 என்ற கோல்களில் மட்டுமே தோற்கடித்தது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]