பொது

நிலையான அரசியல் அமைப்பால் மடானி அரசாங்கத்திற்கு வெற்றி

23/11/2024 06:17 PM

கோலாலம்பூர், 23 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த இரு ஆண்டுகளாக நாட்டை ஆளும் மடானி அரசாங்கத்தின் வெற்றி என்பது அரசியல் நிலைத்தன்மை, தெளிவான கொள்கைகள் மற்றும் பொது சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்பின் விளைவாகும்.

மலேசியாவின் தரத்தை உலகளாவிய நிலையில் எடுத்துச் செல்வதற்கு, நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் கைக்கோர்த்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இந்த வெற்றியானது நிலையான அரசியல் அமைப்பால் சாத்தியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் ஒன்றுபட்ட தலைமைத்துவத்தால் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் செயல்திறன் மற்றும் தயார்நிலையைக் காட்டும் அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு முக்கியமாகும். அவர்கள் சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் செயல்படுத்துகின்றனர்.....'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர், மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டை முன்னிட்டு நடைபெற்றுவரும் 2TM மற்றும் 2024 பொது சேவை உருமாற்றத்திற்கான தேசிய மாநாட்டின்போது பிரதமர் அதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டை வளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் தனியார் துறையின் ஈடுபாட்டிற்கும் அன்வார் நன்றி பாராட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)