பெய்ஜிங், 23 நவம்பர் (பெர்னாமா) -- சீனா மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டி.
நாட்டின் கலப்பு இரட்டையர்கள் ஹோ பாங் ரொன் - செங் சு யின் ஜோடி இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
ஹாங் காங் போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவர்கள் சூப்பர் 750 இறுதி போட்டிக்கு நுழைவதன் வழியாக வரலாற்றை படைத்துள்ளனர்.
ஜிம்னாசியம் ஷென்சென்னில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாங் சுன் மான் - செ யிங் சுவெட் ஜோடியை தோற்கடிக்க ஹூ பாங் ரொன் - செங் சூ யின் ஜோடி 65 நிமிடங்கள் வரை போராட வேண்டியிருந்தது.
21-14, 17-21, 21-19 என்ற புள்ளி கணக்கில் அவர்கள் வெற்றிப் பெற்று இறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.
நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் சீனாவின் முதல் நிலை விளையாட்டாளர்களான ஃபெங் யான் சே - ஹுவாங் டொங் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]