கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) - கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை நாட்டில் ஒரு லட்சத்து 20,000-க்கும் அதிகமான EXPATRIATE எனும் புலம்பெயர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதலாக 7,500 கோடி ரிங்கிட் அவர்கள் பங்களிப்பதாகவும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடு என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நாட்டில் பணிபுரிந்து வருவதாக சைஃபுடின் கூறினார்.
"அனைத்து பிரிவுகளும் உள்ளன. சேவை, தகவல் தொழில்நுட்பம் இப்படி பல. சீனா 27,460; இந்தியா 23,131; பிலிப்பைன்ஸ் 9,302; ஜப்பான் 8,739; இந்தோனேசியா 8,333. இவர்கள் அனைவரும் 64 விழுக்காட்டினர். இதர நாடுகள் 36 விழுக்காடு,'' என்றார் அவர்.
பாயா பாசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் ஷாஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு சைஃபுடின் அவ்வாறு பதிலளித்தார்.
புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்து, உள்நாட்டு வருமான வரி வாரியம் LHDN 10 கோடி ரிங்கிட் வரியை வசூல் செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)