விளையாட்டு

உலக தர வரிசையில் 132வது இடத்திற்கு முன்னேறியது ஹரிமாவ் மலாயா

29/11/2024 06:55 PM

கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- உலக தர வரிசையில் ஒரு படி முன்னேறி ஹரிமாவ் மலாயா அணி 132வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பயிற்றுநர் பாவ் மார்டி வின்சென்ட் தலைமையிலான ஹரிமாவ் மலாயா, 1117.05 புள்ளிகள் பெற்றுள்ளதாக உலக காற்பந்து சம்மேளனம், FIFA தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 14ஆம் தேதி லாவோஸுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல்களில் மலேசியா வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுடன் மலேசியா 1-1 என்று சமநிலை கண்டது.

இதன்வழி, மலேசியா உலக தர வரிசையில் முன்னேறினாலும், தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.

2022ஆம் ஆண்டு உலக கிண்ண வெற்றியாளரான அர்ஜென்டினா தொடர்ந்து முதல் நிலையில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)