வார்சா, 29 நவம்பர் (பெர்னாமா) -- தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற இகா சுவேதெக் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மேற்கொண்ட சோதனையில், தடைசெய்யப்பட்ட மருந்தை, 23 வயதான இகா சுவேதெக் தற்செயலாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
தூக்கமின்மை மற்றும் விமான பயணங்கள் மேற்கொள்ளும் போது ஏற்படும் களைப்பு ஆகிய காரணங்களால் சுவேதெக் அம்மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அம்மருந்தை உட்கொண்டது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால் தாம் இத்தண்டனையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)