Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஜப்பான் பொது பூப்பந்து; நாட்டின் கலப்பு இரட்டை அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்

16/07/2025 06:46 PM

தோக்கியோ, 16 ஜுலை (பெர்னாமா) -- ஜப்பான் பொது பூப்பந்து போட்டி.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்று நாட்டின் கலப்பு இரட்டையரான கோ சூன் ஹுவாட்- ஷெவோன் லாய் ஜெமி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

தாய்லாந்தின் ருட்டனாபாக் ஒப்தோங்- ஜெனிச்சா சுட்ஜைபிரபாட் ஜோடியுடன் சூன் ஹுவாட்- ஷெவோன் லாய் களம் கண்டனர்.

 21-15, 21-10 என்ற புள்ளிகளில் இவ்வாட்டத்தை 30 நிமிடங்களில் சூன் ஹுவாட்- ஷெவோன் லாய் ஜோடி கைப்பற்றினர்.

நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் உலகின் ஆறாம் நிலையில் இருக்கும் அவர்கள் டென்மார்க் விளையாட்டளர்களுடன் மோதவுள்ளனர்.

இதனிடையே, உலகின் நான்காம் நிலையில் உள்ள நாட்டின் மற்றோர் இரட்டையரான சென் தாங் ஜி- தொ வெய் கனடாவின் கெவின் லீ- ஜொசஃபின் வூ ஜோடியை 21-15, 21-19 என்ற புள்ளிகளில் தோற்கடித்தனர்.

மற்றொரு கலப்பு இரட்டையருக்கான ஆட்டத்தில் நாட்டின் ஹூ பாங் ரொங்- செங் சூ இன் ஜோடி அமெரிக்காவின் பிரெஸ்லி ஸ்மித்- ஜென்னி கெய்ன் ஜோடியை 21-19, 12-21, 21-16 என்ற புள்ளிகளில் தோற்கடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]