ஜோகூர், ஜூலை 17 (பெர்னாமா) -- கடந்த வாரம், ஜோகூர் கெலாங் பாத்தாவில் உள்ள சுங்கை பூலாயில் விழுந்து விபத்துக்குள்ளான அரச மலேசிய போலீஸ் படை, (பி.டி.ஆர்.எம்) இன் ஹெலிகாப்டரின் பாகங்கள், இன்று காலை 11 மணி வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டன.
தொடர் விசாரணைக்காக, அவற்றை சிலாங்கூர், சுபாங்கில் உள்ள வான் நடவடிக்கை படை, பி.ஜி.யூ-விற்குக் கொண்டு செல்லப்படும் என்று உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறை, கே.டி.என்.கே.ஏ-வின், பி.ஜி.யூ கமன்டர் டத்தோ நோர் ஷாம் முஹ்மட் ஜானி தெரிவித்தார்.
விபத்துக்கான விரிவான விசாரணையை, விமான விபத்து புலனாய்வு பிரிவு, (பி.எஸ்.கே.யூ) மேற்கொள்ளும் என்று பெர்னாமா தொடர்புக் கொண்டபோது, டத்தோ நோர் ஷாம் கூறினார்.
இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டம் கட்டமாக, 9M-PHG எனும் பதிவு எண்ணைக் கொண்ட, AS355N ரக ஹெலிகாப்டரை நீரில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பி.டி.ஆர்.எம்-மின் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் ஒரு கிரேன் கப்பலைப் பயன்படுத்தி ஹெலிகாப்டரின் சிதைவுகள் வெளியேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அரச மலேசிய கடற்படை இரண்டாவது மண்டல கடல்சார் போலீஸ் படை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் ஆகியோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)