பெர்மாதாங் பாவ், 19 ஜூலை (பெர்னாமா) - புதிதாக நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் எட்டு நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தின் 14 நீதிபதிகளும் ஜூலை 28 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நீதித்துறை நியமன ஆணையம், JAC மதிப்பீடு, மலாய் ஆட்சியாளர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் மாமன்னரின் ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து தேவையான படிநிலைகளையும் கடந்து இந்த நியமனம் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
''நீதித்துறை நியமன ஆணையம் அந்தப் பெயரைப் பிரதமரிடம் கொண்டு வரும்போது, பிரதமர் அதைப் பரிசீலித்து மாமன்னரிடம் கொண்டுச் செல்வார். பின்னர் மாமன்னர் மற்றும் ஆட்சியாளர்கள் குழு அதை அங்கீகரிக்கும். பின்னர் மாமன்னர் ஒப்புதல் அளிப்பார். நாங்கள் அதை (நியமனம்) நேற்று அறிவித்தோம்,'' என்றார் அவர்.
சனிக்கிழமை, பினாங்கு பெர்மாதாங் பாவில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அன்வார் அவ்வாறு கூறினார்.
சில தரப்பினர் சித்தரிப்பது போல எந்த நீதிபதியும் நீக்கப்படவில்லை அல்லது பணிநீக்கம் செய்யப்படவில்லை என்று பிரதமர் விளக்கினார்.
மாறாக, புதிய நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை கவனமாகவும், அரசியலமைப்பு முறைப்படியும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)