Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஒருமைப்பாடு & சரியான நிர்வாக நடைமுறையின் மூலம் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்

12/03/2026 05:03 PM

கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- ஊழலை எதிர்த்து போராடுவதற்கு சட்ட அமலாக்கம் மட்டும் போதாது..

மாறாக, ஒருமைப்பாடு மற்றும் சரியான நிர்வாக நடைமுறைகளின் மூலம் அதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும்.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான முயற்சிகளை ஆக்கப்பூர்வமாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படுத்துவதை உறுதிச் செய்வதற்கு, பொது, தனியார் மற்றும் மக்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கியம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தேசிய நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஒருமைப்பாட்டு அதிகாரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேசிய நிர்வாக அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, பொது நிதி கசிவும் அதிகார மீறல் தொடர்பான பிரச்சனைகளும் தேசிய நிர்வாகத்தை மட்டுமின்றி பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய மக்களின் நல்வாழ்வையும் பாதிப்பதாக, அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கழகங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் பொது சேவையின் அடிப்படையாக நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து இருப்பதை உறுதிச் செய்வதற்கு, நிர்வாகத்தின் திட்டங்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)