பொது

அத்தியாவசிமான பணியாளர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி

21/10/2020 09:40 PM

கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- பொதுச் சேவை தலைமை இயக்குனர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் அடிப்படையில்,  அதிமுக்கியமான மற்றும் அத்தியாவசிமான பணிகளை மேற்கொள்பவர்களைத் தவிர இதர துறைகளைச் சார்ந்தவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கின்றார். 

நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு கால கட்டம் முழுவதும் பொது சேவைகள் வழங்கப்படுவதில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இன்று, பொதுச் சேவை தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ மொஹமட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் கூறுகையில், 

கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சிலாங்கூர் மற்றும் லாபுவானில் பணி புரியும் அரசாங்க ஊழியர்களில் 30 விழுக்காட்டினர் மட்டும் அலுவலகத்தில் இருப்பதை, அனைத்து துறைத் தலைவர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்று, பொதுச் சேவை தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ மொஹமட் கைருல் அடிப் அப்துல் ரஹ்மான் கூறியதை மேற்கோள் காட்டி இஸ்மாயில் சப்ரி இதனைத் தெரிவித்தார். 

அடிப்படைச் சேவைகள் தொடர்வதை உறுதி செய்ய, நாளை முதல் பி.கே.பி.பி அமலாக்கத்தின் இறுதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார். 

--பெர்னாமா