பொது

எஸ்.ஓ.பி-ஐ மீறியதால் 954 அபராதங்கள் வெளியீடு

22/09/2021 04:49 PM

கோலாலம்பூர், 22 செப்டம்பர் (பெர்னாமா)-- செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றத் தவறியது தொடர்பாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு 49 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய 954 அபராதங்களை வெளியிட்டிருக்கிறது.

அதில், உள்நுழையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக் குறித்து காட்டாதது, மை செஜாத்ரா செயலியைப் பயன்படுத்தி கடை மற்றும் வாடிக்கையாளரைப் பதிவு செய்யாதது மற்றும் சுவாசக் கவசம் அணியத் தவறியது போன்ற குற்றங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. 

1988-ஆம் ஆண்டு தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், கடந்த மே 13-ஆம் தேதி முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரை, KPDNHEP அமலாக்கத் தரப்பினர் எட்டு லட்சத்து மூவாயிரத்து 705 கடைகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் வழி இந்த அபராதங்கள் வெளியிடப்பட்டதாக அஸ்மான் அடாம் கூறினார்.

''நாங்கள் மேற்கொண்ட கண்காணிப்பின் அடிப்படையில், மே 13-ஆம் தேதி முதல் நேற்று வரை, (எஸ்.ஓ.பி.) பின்பற்றியவர்களின் விகிதம் மிக அதிகம் அதாவது 98.79 விழுக்காடு. நமது வியாபாரிகள் பின்பற்றிய விகிதம் அது. பி.கே.பி. 1, பி.கே.பி.  2, பி.கே.பி. 3 (காலக்கட்டத்தின்போது) சம்பவங்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்தது,'' என்றார் அவர்.

இதர மாநிலங்களைக் காட்டிலும் அதிக கடைகளைக் கொண்டிருக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கு மாநிலங்களில் பெரும்பாலான அபராதங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)