உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு 23/09/2021

23/09/2021 04:53 PM

வாஷிங்டன் டி.சி, 23 செப்டம்பர் (பெர்னாமா) -- மற்ற நாடுகளுக்கு நன்கொடை அளிக்கும் பொருட்டு மேலும் 50 கோடி கொவிட் -19 தடுப்பூசிகளை வாங்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

ஏழை நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறி வருவதால், வாங்கும் தடுப்பூசிகளை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பவிருப்பதாக பைடன் தெரிவித்திருக்கிறார்.

பெரு

பெருவில் தொலைதூரத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி சமூகத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

நகர்ப்புறங்களில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு செல்ல சிரமப்படும் இவர்களை நாடி தடுப்பூசி செலுத்துப்பட்டு வருதாக பெரு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நியூசிலாந்து

கொவிட்19 நோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்த அங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து

கொவிட்19 நோய் பரவல் காரணமாக, தாய்லாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அதிகமான வாடகை கார் ஓட்டுநர்கள் அவர்களின் வாடகை கார்களை கிடங்கில் விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கே சென்றுவிட்டனர்.

தலைநகர் பாங்காக்கில் சுமார் ஓராண்டிற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கார்களின் கூரைகளிலும் முன்புற மூடியின் மேலும் தற்போது காய்கறிகள் பயிரிடப்பட்டிருக்கின்றன.

இதன் மூலம் நேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்க முடிவதாகவும், காய்கறிகளை தங்களுக்கும் பகிர்ந்து கொள்ள முடிவதாகவும், இந்நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)