பொது

இரத்த தானம் செய்வதில் இந்தியர்கள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்

23/10/2021 08:07 PM

கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில், நோயாளிகளை குணப்படுத்துவதற்காக, இரத்த கையிருப்பு அதிக்கரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இரத்த தானம் செய்வபர்களின் எண்ணிக்கை 2.3 விழுக்காடாக மட்டுமே பதிவாகுவதாக, தேசிய இரத்த வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த எண்ணிக்கை வருத்தமளிக்கும் வகையில் இருந்தாலும், இரத்த தானம் செய்வதில் இந்தியர்களின் ஈடுபாடு மிகவும் அதிகமாக இருப்பதாக, கோலா பிலா துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர், டாக்டர் சேது ஜனார்தனன் குப்பன் கூறுகின்றார்.

இரத்த வகைக் குறித்து மக்கள் அறிந்திருந்தாலும், இரத்த வகையைக் குறிப்பிடும் போது இரத்தவகைக்குப் பின்னர் POSITIVE மற்றும் NEGATIVE எனும் அம்சம் அதாவது  resilience compatibility-யை அடையாளம் காணுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று டாக்டர் சேது ஜனார்தனன் தெளிவுப்படுத்தினார்.

பொதுவாக, O  இரத்த வகையை சேர்ந்தவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் இரத்தம் கொடுக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும், .O- வகை இரத்தம் உடையவர்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் வழங்க முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

''இரத்த வகைகளுக்கு குறித்து நமக்கு தெரியும். ஆனால்  A-, B-,  AB- ஆகிய இரத்தப் பிரிவுகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது,'' என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது,  A-, B-, AB- போன்ற நெகட்டிவ் இரத்த வகையின் தேவை அதிகம் இருக்கிறது. காரணம் நாடு முழுவதிலும், 2.5 விழுக்காட்டினர் மட்டுமே இந்த வகை வகையில் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், இரத்த தானம் செய்வதில் அதிக ஈடுபாடு கொண்ட இந்தியர்களிடையே, நெகட்டிவ் இரத்த வகை அதிகமாக இருப்பதாக, அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், தேசிய வங்கி வெளியிட்ட ஆய்வின் படி, இரத்த தானம் வழங்கும் இந்தியர்களில் 7.5 விழுக்காட்டினருக்கு இந்த வகை இரத்தம் இருப்பதாக கூறியிருக்கிறது.

''கொவிட்-19 நோய் தாக்கத்ததினால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் மேற்கொள்ளப்படவிருப்பதால், நெகட்டிவ் வகை  இரத்த தானம் அதிகம் தேவைப்படும்,'' என்று டாக்டர் சேது ஜனார்தனன்  தெரிவித்தார்.

கொவிட்-19 நோய் தாக்கம், பாதுகாப்பு அம்சம் குறித்து அச்சம் கொள்ளாமல், பிறரின் உயிரைக் காப்பற்றக் கூடிய இரத்த தானம் செய்யும் பொதுமக்கள் குறிப்பாக, நெகட்டிவ் இரத்த வகையை சேர்ந்தவர்கள் முன்வர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]